/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆலம்பாடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்; பொன்முடி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
ஆலம்பாடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்; பொன்முடி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ஆலம்பாடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்; பொன்முடி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ஆலம்பாடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்; பொன்முடி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 15, 2025 09:25 PM

திருக்கோவிலுார்; முகையூர் ஒன்றியம், ஆலம்பாடியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமினை பொன்முடி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
முகையூர் ஒன்றியம், ஆலம்பாடி ஊராட்சி தனியார் திருமண மண்டபத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை துவக்கி வைத்தவுடன், ஆலம்பாடியில் நடந்த துவக்க விழாவிற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
பொன்முடி எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து பேசியதாவது;
விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்களில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. இதற்காக 3 கட்டங்களாக 291 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, ஆதார் திருத்தம், புதிய மின்னணு ரேஷன் கார்டு, திருத்தம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் என அரசு சேவைகள் தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
அவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காண முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறையைச் சேர்ந்த 43 சேவைகளும், ஊரக பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்பட உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
உதவி கலெக்டர் வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, ஆர்.டி.ஓ., முருகேசன், ஒன்றிய குழு சேர்மன் தனலட்சுமி உமேஸ்வரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், தாசில்தார் முத்து, பி.டி.ஓ., கள் பாலச்சந்தர், ஸ்ரீதர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஆலம்பாடி ஊராட்சி தலைவர் ராஜகுமாரி நன்றி கூறினார்.