/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; சடையம்பட்டில் சேர்மன் துவக்கி வைப்பு

ADDED : ஜூலை 15, 2025 09:28 PM

கள்ளக்குறிச்சி; சடையம்பட்டு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் துவக்க விழா நடந்தது.
அரசு திட்டங்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று வழங்குவதற்காக, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, சின்னசேலம் அடுத்த சடையம்பட்டு ஊராட்சியில் நடந்த முகாமிற்கு, ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பொதுமக்கள் விரும்பும் நலத்திட்டங்களுக்கான விண்ணப்பம், தகவல் கையேடு, படிவங்கள் வழங்கப்பட்டது. பி.டி.ஓ., சுமதி முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் மல்லிகா, தி.மு.க., கிளை செயலாளர்கள் பச்சையாப்பிள்ளை, ராஜா, கருணாநிதி, தொண்டரணி நிர்வாகி அய்யாவு, மகளிரணி நிர்வாகி சங்கரி உட்பட பலர் உடனிருந்தனர்.