/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போலீஸ் குடியிருப்பில் திருட்டு பைக் நிறுத்தம்: பலே ஆசாமிக்கு வலை
/
போலீஸ் குடியிருப்பில் திருட்டு பைக் நிறுத்தம்: பலே ஆசாமிக்கு வலை
போலீஸ் குடியிருப்பில் திருட்டு பைக் நிறுத்தம்: பலே ஆசாமிக்கு வலை
போலீஸ் குடியிருப்பில் திருட்டு பைக் நிறுத்தம்: பலே ஆசாமிக்கு வலை
ADDED : நவ 13, 2025 10:40 PM

கள்ளக்குறிச்சி: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன பைக்கை, போலீஸ் குடியிருப்பு பகுதியில் நிறுத்தி விட்ட சென்ற பலே ஆசாமி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையம் செல்லும் வழியில் சப் இன்ஸ்பெக்டர் குடியிருப்பு உள்ளது. அப்பகுதியில் கடந்த ஒரு சில நாட்களாக கேட்பாரற்று பல்சர் பைக் ஒன்று நின்றிருந்தது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் அந்த பைக் எடுத்து சென்று, வாகன பதிவு எண்ணை கொண்டு விசாரித்தனர்.
அதில், ஏர்வாய்ப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த ஜோதி,50; என்பவருக்கு சொந்தமான பைக் என்பது தெரிந்தது.
மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் முன்பு பைக் நிறுத்தி வைத்திருந்தபோது திருடுபோனதும், அது தொடர்பாக கச்சிராயபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருப்பதும் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருடு போன பைக்கை, தற்போது போலீஸ் குடியிருப்பு வளாக பகுதியில் நிறுத்தி விட்டு சென்ற மர்ம ஆசாமி குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

