/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் 17ம் தேதி கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி
/
கள்ளக்குறிச்சியில் 17ம் தேதி கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சியில் 17ம் தேதி கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சியில் 17ம் தேதி கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி
ADDED : நவ 13, 2025 10:40 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வரும் 17ம் தேதி கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் முருகேசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
ஆண்டுதோறும் நவ., 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, கள்ளக்குறிச்சியில் வரும் 17ம் தேதி 'வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடங்கிய மாநில கூட்டுறவு கொள்கை' என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி நடக்கிறது.
இதில், அமைச்சர் வேலு பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், சிறந்த கூட்டுறவாளர் மற்றும் சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கி கவுர விக்க உள்ளார்.
மேலும், கூட்டுறவு வார விழாவையொட்டி தினமும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம், மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டி, கூட்டுறவு நிறுவனங்களில் கொடியேற்றுதல், மருத்துவ முகாம், விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

