/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கார் பயணம்
/
போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கார் பயணம்
ADDED : நவ 14, 2025 11:11 PM

சங்கராபுரம்: போதை ஒழிப்பு குறித்து ரோட்டரி பெண்கள் கார் பயணம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ரோட்டரி கிளப் பெண்கள் 30 பேர் கொண்ட குழுவினர், போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் ரத்ததானம் செய்வதின் அவசியம் குறித்து கார் மூலம் பிரசார பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி, சேலம், எடப்பாடி, காவேரிப்பட்டினம் ஆகிய ஊர்களை கடந்து கள்ளக்குறிச்சி வழியாக சங்கராபுரம் வந்த பயண குழுவினரை சங்கராபுரம் ரோட்டரி கிளப் தலைவர் மணிவண்ணன், இன்னர்வீல் கிளப் தலைவி இந்துமதி செல்வமணி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று போதையால் இளம் தலைமுறையினர் மற்றும் மாணவர்கள் வாழ்க்கையை சீரழித்து கொள்வதினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் ரோட்டரி துணை ஆளுநர்கள் சுரேஷ், வசுமதி, சேர்மன் கீதா, முன்னாள் துணை ஆளுநர்கள் முத்துக்கருப்பன், ஜனார்த்தனன், வெங்கடேசன், செயலர் மோகன்தாஸ், பொருளாளர் முனுசாமி, இன்னர்வீல் கிளப் முன்னாள் தலைவிகள் தீபா, அகல்யா, மஞ்சுளா, கங்கா, பேரூராட்சித் தலைவர் ரோஜாரமணி, முன்னாள் தலைவர்கள் ஆறுமுகம், சுதாகரன், நடராஜன், சீனுவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

