/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இயற்கை விவசாய வயல்கள் உதவி இயக்குனர் ஆய்வு
/
இயற்கை விவசாய வயல்கள் உதவி இயக்குனர் ஆய்வு
ADDED : நவ 14, 2025 11:12 PM

சங்கராபுரம்: கல்வராயன்மலை பகுதியில் இயற்கை விவசாய வயல்களை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
சங்கராபுரம் வட்டம் கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலை, கிளாக்காடு பகுதியில் உள்ள கிராமங்களில் வேளாண்மை துறை மூலம் தேசிய இயற்கை வேளாண்மை இயக்கத்தின் சார்பில் 125 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயிகளின் வயல்களை சங்கராபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஆனந்தன் ஆய்வு செய்தார். அதில் இயற்கை முறையில் ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்துகள், களைக்கொல்லி பயன்படுத்தாமல் விவசாயம் செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தார். ஆய்வின் போது துணை வேளாண்மை அலுவலர் முருகேசன், உதவி வேளாண்மை அலுவலர் பழனிவேல், திட்ட ஒருங்கிணைப்பாளர் அனிதா, ஆத்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருண்குமார், லோகபிரியா, ஊராட்சி தலைவர் செல்வம், மகளிர் திட்ட உறுப்பினர்கள் இந்துமதி, பூபதி ஆகியோர் உடனிருந்தனர்.

