ADDED : பிப் 21, 2025 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் தெரு நாய்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சங்கராபுரம் பேருராட்சியில் அதிகளவில் தெரு நாய்கள் திரிகின்றன. இந்த நாய்கள் நடந்து செல்லும் குழந்தைகள், சிறுவர்களைதுரத்திச் சென்று கடிக்கின்றன. மேலும், இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டிச் சென்று கடிக்கப் பாய்வதால் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன், சங்கராபுரம் பொய்குனம் சாலையில் விளையாடிய 5 வயது சிறுவனை தெருநாய் கடித்தது.
நாளுக்கு நாள் நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த பேரூாட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.