திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் புதிய பஸ் நிலையம் அமையும் இடத்தை மாற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருக்கோவிலுார் பஸ் நிலையம் அருகே, நகராட்சி நிர்வாகத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு தனிநபரால் வழங்கிய இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியானது. ரூ. 22 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான நில பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் நிறைவடைந்து, அரசாணை வெளியிடப்பட்டு, டெண்டரும் விடப்பட்டது.
பணிகள் துவங்க இருக்கும் நிலையில், புதிய பஸ் நிலையம் அமையும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி, சமூக ஆர்வலர் கணேஷ் தலைமையில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

