/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் இன்று மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
/
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் இன்று மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் இன்று மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் இன்று மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
ADDED : ஜூன் 02, 2025 11:00 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது.
கல்லுாரி முதல்வர் தர்மராஜா செய்திக்குறிப்பு:
கல்லுாரியில் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.எஸ்சி., கணினிஅறிவியல், வேதியியல், இயற்பியல், கணிதம் மற்றும் பி.காம்., வணிகவியல் ஆகிய 7 இளங்கலை பாடப்பிரிவுகள் உள்ளன. இக்கல்லுாரியில் சேருவதற்காக 9,753 மாணவ, மாணவியர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
இதில், தரவரிசை மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இன்று 3ம் தேதி முதல் கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது.
அதன்படி, இன்று காலை 10:00 மணிக்கு மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மற்றும் விளையாட்டு துறை பிரிவின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.
தொடர்ந்து, நாளை 4ம் தேதி பி.ஏ. தமிழ், ஆங்கிலம் மற்றும் பி.காம்., வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது. 5ம் தேதி வேதியியல், இயற்பியல், கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.
கலந்தாய்வில் பங்கேற்று, மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மட்டுமே சேர்க்கை உறுதி செய்யப்படும். இட ஒதுக்கீடு விதிகள் மற்றும் தரவரிசை பட்டியல் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.