ADDED : பிப் 13, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: மரவானத்தம் கிராமத்தில் பள்ளி மாணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த திருக்குன்றத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் மகன் பரமசிவம், 15; பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவரது பெற்றோர் இறந்து விட்டதால், மாமா மாதேஸ்வரனுடன் வசித்து வந்தார்.
கடந்த 11ம் தேதி காலை 8:00 மணியளவில் வெளியே சென்ற பரமசிவம் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.
இந்நிலையில், மரவானத்தம் கிராமத்தில் உள்ள கொட்டகையில் பரமசிவம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.