/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பல்கலைக்கழக அளவில் மாணவிகள் சாதனை; வள்ளியம்மை கல்லுாரி தலைவர் பெருமிதம்
/
பல்கலைக்கழக அளவில் மாணவிகள் சாதனை; வள்ளியம்மை கல்லுாரி தலைவர் பெருமிதம்
பல்கலைக்கழக அளவில் மாணவிகள் சாதனை; வள்ளியம்மை கல்லுாரி தலைவர் பெருமிதம்
பல்கலைக்கழக அளவில் மாணவிகள் சாதனை; வள்ளியம்மை கல்லுாரி தலைவர் பெருமிதம்
ADDED : அக் 01, 2025 12:55 AM

அரகண்டநல்லுார் வள்ளியம்மை மகளிர் கல்லுாரி மாணவிகள் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.
கல்லுாரியின் தலைவர் பூபதி கூறியதாவது:
திருக்கோவிலுார் அடுத்த அரகண்டநல்லுாரில் 15 ஆண்டுகளுக்கு முன் வள்ளியம்மை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்பட்டது. இளங்கலை பாடப் பிரிவுகளான பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., - பி.காம்., (சி.ஏ) பி.பி.ஏ., - பி.சி.ஏ., - பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல் கம்ப்யூட்டர் சயின்ஸ், மைக்ரோ பயாலஜி மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளான எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், எம்.காம்., - எம்.எஸ்சி., பாடப்பிரிவுகள் இயங்குகிறது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இக்கல்லுாரி மாணவிகள் பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பிடித்துள்ளனர். முற்றிலும் கிராமப் பகுதிகளை உள்ளடக்கிய மாணவிகள் பல்கலைக் கழக அளவில் தரவரிசை பெறுவது எங்கள் கல்லுாரியின் சிறந்த கல்வி சேவைக்கு எடுத்துக்காட்டாகும்.
இதற்கு அதிநவீன வசதியுடன் கூடிய ஆய்வகங்கள், இன்டர்நெட் வசதியுடன் கூடிய நுாலகம், பசுமையான கல்லுாரி வளாகம், விசாலமான விளையாட்டு மைதானம், கிராம பகுதிகளுக்கு பஸ் வசதி, திறமையான பேராசிரியர்கள் மற்றும் வளாக வேலை வாய்ப்பு முகாம் காரணமாக அமைகிறது.
முற்றிலும் சமுதாய வளர்ச்சிக்கு பெண் கல்வியே முக்கியம் என்பதை உணர்ந்து, ஏழை, எளிய மாணவிகளுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வியை வழங்கி, வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுப்பதன் மூலம் சிறந்த சமூகத்தை உருவாக்கலாம் என்ற உயரிய நோக்கமே எங்கள் கல்லுாரியின் வளர்ச்சிக்கு காரணம்.
6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் பயின்ற அனைத்து மாணவிகளுக்கும் மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் அரசின் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பயன்பெறும் வசதியும் கல்லுாரியில் உள்ளது. இவ்வாறு பூபதி கூறினார்.