ADDED : மே 24, 2025 12:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் கடந்த 2003ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்தோஷ சங்கமம் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தாளாளர் ரஹமத்துல்லா தலைமை தாங்கி பேசினார். கல்லுாரி தலைவர் ஜெகநாதன், செயலாளர் அல்லாபக்ஷ் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் ஆசிரியர்கள் மணி, கர்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினர். கல்லுாரியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்றனர்.