நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அடுத்த மட்டிகைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன் மகள் சிவரஞ்சன, 17; இவர்களது பெற்றோர் வெளி மாநிலத்தில் கூலி வேலை செய்து வந்தனர். இதனால் சிவரஞ்சனி வெங்கட்டாம்பேட்டை கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி சங்கராபுரம் பகுதியில் உள்ள கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி பகல் 1:00 மணி அளவில் வீட்டிலிருந்த சிவரஞ்சனி மாயமானார். இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.