/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தண்டலை பெருவங்கூர் அரசு பள்ளியில் கழிப்பறை இன்றி மாணவர்கள் அவதி
/
தண்டலை பெருவங்கூர் அரசு பள்ளியில் கழிப்பறை இன்றி மாணவர்கள் அவதி
தண்டலை பெருவங்கூர் அரசு பள்ளியில் கழிப்பறை இன்றி மாணவர்கள் அவதி
தண்டலை பெருவங்கூர் அரசு பள்ளியில் கழிப்பறை இன்றி மாணவர்கள் அவதி
ADDED : ஆக 28, 2025 02:25 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தண்டலை பெருவங்கூர் அரசு பள்ளியில் கழிப்பறை வசதியின்றி மாணவ மாணவிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை - பெருவங்கூர் ஏரிக்கரையில் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. ஏரியின் கரையை ஒட்டியவாறு உள்ள இந்த பள்ளியில் தண்டலை, பெருவங்கூர், பாளையம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிக ளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட் டோர் படித்து வருகின்றனர்.
நடுநிலைப்பள்ளியாக இருந்த இப்பள்ளி கடந்த 2010ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் பள்ளி தரம் உயர்த்தப்பட்ட போதிலும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில் இப்பள்ளிக்கான கழிப்பறைகளை நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் கட்டப்பட்டது. இதுவும், மாணவர்கள் எண்ணிக்கை ஏற்ப போதுமானதாக இல்லை.
இதனால் மாணவர்கள் அருகில் உள்ள விவசாய நிலம், ஏரிக்கரையை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
பள்ளியையொட்டி ஏரி உள்ளது. மணிமுக்தா அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்போது ஏரி நிரம்பி உபரி நீர் கால்வாய் வழியாக வெளியேறி வருகிறது. அத்தகைய மழை காலத்தில் ஏரி நீர் பள்ளிக்குள் புகும் அபாயம் உள்ளது. பள்ளியின் முன் பகுதியில் மட்டும் சுவர் அமைத்துள்ளனர். பள்ளியை சுற்றிலும் மதில் சுவரும், மாணவ மாணவிகளுக்கு ஏற்ப கூடுதல் கழிப்பறை ஏற்படுத்தி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

