/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குழந்தை வளர்ச்சி திட்டம் குறித்த ஆய்வு கூட்டம்
/
குழந்தை வளர்ச்சி திட்டம் குறித்த ஆய்வு கூட்டம்
ADDED : செப் 11, 2025 10:58 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களின் பதிவுகள், வளர்ச்சி குறியீடுகள், ஊட்டச்சத்து நிலை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.
பின், ஆரோக்கியமான குழந்தை வளமான எதிர்காலத்திற்கு இன்றியமையாதது என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒருங் கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் அருணா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.