/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சமூக பாதுகாப்பு திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம்
/
சமூக பாதுகாப்பு திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம்
ADDED : மார் 15, 2025 08:22 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள், முன்னேற்றம் குறித்து தாலுகா வாரியாக தனி தாசில்தாரிடம் கேட்டறியப்பட்டது.
தொடர்ந்து, முதியோர் உதவித் தொகை பெறும் பயனாளிகளின் ஆதார் சரிபார்ப்பு, உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு மற்றும் செலவின விபரம் மற்றும் முதல்வரின் முகவரி துறையில் உள்ள நிலுவை மனுக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தவும், முதல்வரின் முகவரி துறையில் நிலுவையில் உள்ள மனுக்களுக்கு விரைவாக தீர்வு காணுமாறும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் செந்தில்குமார் மற்றும் தனி தாசில்தார்கள் பங்கேற்றனர்.