/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நீர் முழ்கி மோட்டார் திருட்டு
/
நீர் முழ்கி மோட்டார் திருட்டு
ADDED : நவ 11, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே நீர் முழ்கி மோட்டார் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சடையன் மகன் கண்ணன். இவருக்கு சொந்தமாக காட்டுவனஞ்சூர் கிராமத்தில் நிலம் உள்ளது. கண்ணன் நேற்று முன்தினம் காலை வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது கிணற்றுக்குள் இருந்த மோட்டார் திருடு போனது தெரியவந்தது.
சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.