/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கரும்பு விவசாயிகள் முன்னேற்ற சங்கம் கலந்தாய்வு கூட்டம்
/
கரும்பு விவசாயிகள் முன்னேற்ற சங்கம் கலந்தாய்வு கூட்டம்
கரும்பு விவசாயிகள் முன்னேற்ற சங்கம் கலந்தாய்வு கூட்டம்
கரும்பு விவசாயிகள் முன்னேற்ற சங்கம் கலந்தாய்வு கூட்டம்
ADDED : ஆக 02, 2025 07:37 AM
மூங்கில்துறைப்பட்டு: கரும்பு விவசாயிகள் முன்னேற்ற சங்கம் கலந்தாய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு சங்க தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜனார்த்தனன், பொருளாளர் விஜயராஜ் முன்னிலை வகித்தனர்.
வரும் 4 ம் தேதி சர்க்கரை ஆலை அரவை பணி துவங்கவுள்ளதால், 2025- 2026 ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு அரவைக்கு கூடுதல் கரும்புகள் வழங்க வேண்டும்.
குறித்த நேரத்தில் கரும்புகளை வெட்டி ஆலைக்கு அனுப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கலந்தாய்வு கூட்டத்தில் மூங்கில்துறைப்பட்டு சுற்றி உள்ள கிராம கரும்பு விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.