தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ நில அளவை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்

நில அளவை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்

நில அளவை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்


ADDED : ஜூலை 16, 2025 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2025 01:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நேற்று நடந்தது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பிரபாகர் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர் ராஜா, மாவட்ட இணை செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் தேவராஜன் வரவேற்றார். மாநில துணை தலைவர் செந்தில்முருகன், அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் மகாலிங்கம் கண்டன உரையாற்றினர். நில அளவர்களாக ஒருமுறை தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை மீண்டும் தரம் உயர்த்தி வழங்குதல், துணை ஆய்வாளர், ஆய்வாளர்கள் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், ஒப்பந்த முறையில் உரிமம் பெற்ற அளவர்களை நியமிப்பதை முற்றிலுமாக கைவிட்டு, காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் உட்பட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் 48 மணி நேர வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் இந்திரகுமார், பொருளாளர் பிரபு, திருக்கோவிலுார் கோட்ட தலைவர் முகமதுஷெரிப், கோட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us