/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூலித்தொழிலாளி இறப்பில் சந்தேகம் பழைய சிறுவங்கூரில் உறவினர்கள் மறியல்
/
கூலித்தொழிலாளி இறப்பில் சந்தேகம் பழைய சிறுவங்கூரில் உறவினர்கள் மறியல்
கூலித்தொழிலாளி இறப்பில் சந்தேகம் பழைய சிறுவங்கூரில் உறவினர்கள் மறியல்
கூலித்தொழிலாளி இறப்பில் சந்தேகம் பழைய சிறுவங்கூரில் உறவினர்கள் மறியல்
ADDED : ஜன 31, 2024 02:17 AM

ரிஷிவந்தியம் : பழையசிறுவங்கூர் பஸ்நிறுத்தத்தில், கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
வாணாபுரம் அடுத்த பழையசிறுவங்கூர் ஊராட்சிக்குட்பட்ட மாந்தம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வேணு மகன் ஆறுமுகம்,37; கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை பகுதியில் ஆறுமுகம் இறந்த நிலையில் இருந்துள்ளார்.
தகவலறிந்த தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த ஆறுமுகத்தின் தந்தை வேணு அளித்த புகாரின் பேரில், சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இந்நிலையில், ஆறுமுகம் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவரது உறவினர்கள் பழையசிறுவங்கூர் பஸ்நிறுத்தத்தில் நேற்று காலை 9 மணியளவில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், சத்தியசீலன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதில், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில், மறியலில் ஈடுபட்டவர்கள் காலை 9.30 மணியளவில் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.