ADDED : மார் 23, 2025 10:36 PM

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அடுத்த சிறுப்பாக்கத்தில் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழக்கும் மத்திய அரசை கண்டித்து தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
உளுந்துார்பேட்டை ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார். மாநில மகளிரணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி, நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியன் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் உதயசூரியன், தேர்தல் பணிக்குழு செல்வேந்திரன், இளம் பேச்சாளர் யமுனா, மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., மற்றும் தொகுதி பொறுப்பாளர் ஸ்ரீதரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல்மாலிக் பேசினர்.
ஒன்றிய செயலாளர்கள் ராஜவேல், வசந்தவேல், முருகன், நகர செயலாளர் டேனியல்ராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண்ராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்லையா, துரைராஜ், ஆசிர்வாதம், ஒன்றிய துணை சேர்மன் அலெக்சாண்டர், கவுன்சிலர் மனோபாலன், நிர்வாகிகள் பிரகாஷ், சிவசங்கர், குருராஜ், விஸ்வநாதன், ஜெகதீசன், நந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முருகவேல் நன்றி கூறினார்.