ADDED : செப் 02, 2025 10:08 PM

சங்கராபுரம்; சங்கராபுரத்தில் வீட்டுமனை பட்டா வழங்ககோரி தாலுகா அலுவலகம் முன்பு நரிக்குறவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கராபுரம் சமத்துவபுரம் அருகே உள்ள நரிக்குறவர் காலனியில், 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள வசித்து வருகின்றனர். இங்கு வசிப்போர், தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்ககோரி அரசு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் நேற்று மாலை 4:00 மணிக்கு, நரிக்குறவர் இன மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாசில்தார் வைரக்கண்ணன், இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விரைவில் வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தன்பேரில் போராட்டத்தை கைவிட்டு 4.30 மணிக்கு கலைந்து சென்றனர்.