/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தமிழ் படைப்பாளர் சங்க முப்பெரும் விழா
/
தமிழ் படைப்பாளர் சங்க முப்பெரும் விழா
ADDED : டிச 29, 2025 06:16 AM

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் தமிழ் படைப்பாளர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.
டாக்டர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். கல்லை தமிழ் சங்க தலைவர் புகழேந்தி, வேலு, ரகுநந்தன், குசேலன், விஜயகுமார் முன்னிலை வகித் தனர். சாதிக்பாஷா வரவேற்றார். மனித உரிமைகள் குறித்து ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் செல்வமணியும், மகாத்மா காந்தி காவிய நுால் வெளியீட்டு ஆசிரியர் லஷ்மிபதி அறிமுக உரையாற்றினார். ஆஸ்திரேலியா சென்று வந்த தமிழ் சங்க தலைவர் சுப்ராயன் பாராட்டப்பட்டார்.
நிகழ்ச்சியில் செயலாளர் சக்திவேல், அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ் சங்க சவுந்தராஜன், கார்குழலி அறக்கட்டளை தாமோதாரன், பாரதி கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அன்புமணி சுப்ராயன் நன்றி கூறினார்.

