/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் 'தமிழ் கனவு' நிகழ்ச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் 'தமிழ் கனவு' நிகழ்ச்சி
ADDED : ஆக 21, 2025 08:57 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் 'மாபெரும் தமிழ் கனவு' நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி கையேடு, தமிழ்ப் பெருமிதம் கையேடுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. தமிழ்ப் பெருமிதம் குறிப்பு வாசிப்பு, வேலை வாய்ப்பு காணொலி, மாபெரும் தமிழ்க் கனவு காணொலி, தடையென்று எதுவுமில்லை தலைப்பின் கீழ் நர்த்தகி நடராஜின் சொற்பொழிவு, கேள்வி பதில், பரிசளிப்பு நடந்தது.
உயர்கல்வி, வேலைவாய்ப்பு, வங்கி கடன் வசதி, தொழில் வாய்ப்பு முதலியவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ளவும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியினை கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் சுமதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கீதா, கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி முதல்வர் தர்மராஜா, ஆர்.கே.எஸ். கல்வி குழும தலைவர் மகுடமுடி, அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.