/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலம் இதயா கல்லுாரியில் இன்று 'தமிழ் கனவு' நிகழ்ச்சி
/
சின்னசேலம் இதயா கல்லுாரியில் இன்று 'தமிழ் கனவு' நிகழ்ச்சி
சின்னசேலம் இதயா கல்லுாரியில் இன்று 'தமிழ் கனவு' நிகழ்ச்சி
சின்னசேலம் இதயா கல்லுாரியில் இன்று 'தமிழ் கனவு' நிகழ்ச்சி
ADDED : ஆக 06, 2025 12:41 AM
கள்ளக்குறிச்சி; கல்லுாரி மாணவிகளுக்கான 'தமிழ் கனவு' நிகழ்ச்சி, சின்ன சேலம் இதயா மகளிர் கல்லுாரியில் இன்று 6ம் தேதி நடக்கிறது.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரைத் திட்டத்தின் கீழ், 'தமிழ் கனவு' நிகழ்ச்சி 5 கட்டங்களாக கல்லுாரிகளில் நடத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி முதல் நிகழ்ச்சியாக சின்னசேலம் இதயா மகளிர் கல்லுாரியல் இன்று 6ம் தேதி நடக்கிறது.
இதில் உயர்கல்வி, வேலை வாய்ப்பு, வங்கி கடனுதவி, தொழில்வாய்ப்பு குறித்து மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகள் அமைத்து எடுத்துரைக்கப்படுகிறது.
தமிழகத்தில் சிறந்து விளங்கும் சொற்பொழிவாளர்கள் மூலம் பெண்கள் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் தொழில்நுட்பம், தொழில் வளர்ச்சி மற்றும் முனைவுக்கான முயற்சிகள் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் சொற்பொழிவு நடக்கிறது. இதில், ஆயிரம் மாணவிகள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியை மாணவிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் உள்ளது.