/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்லை தமிழ் சங்கத்தின் தமிழ் இலக்கிய சொற்பொழிவு
/
கல்லை தமிழ் சங்கத்தின் தமிழ் இலக்கிய சொற்பொழிவு
ADDED : ஜூலை 22, 2025 06:39 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கல்லை தமிழ் சங்கத்தின் 239வது தமிழ் இலக்கிய தொடர் சொற்பொழிவு நடந்தது.
மாவட்ட தமிழ் கவிஞர் மன்ற தலைவர் ஆசு கவி ஆராவமுதன் தலைமை தாங்கினார். உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் சம்பத், கல்லை தமிழ் சங்க துணை தலைவர் அம்பேத்கர், அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ் சங்க தலைவர் சவுந்திரராஜன் முன்னிலை வகித்தனர்.
ராபியாபேகம் தமிழ் தாய் வாழ்த்து பாடினார். செயலாளர் மகேந்திரன் வரவேற்றார். மாணவர்கள் தமிழமுதன், தமிழினியன் திருக்குறள் ஒப்புவித்தனர். கவிஞர் கலைமகள் காயத்ரி, தலைமை ஆசிரியர் அறிவழகன், நடேசன், சண்முகம், ஜெயராமன், பொறியாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தமிழ் இலக்கிய சொற்பொழிவாற்றினர்.
கெடிலம் தமிழ் சங்க தலைவர் பரிக்கல் சந்திரன் எழுதிய 'திருக்குறள் திருமறை தெளிவுரை' எனும் புத்தகத்தை, எம்.எல்.ஏ., செந்தில்குமார் எம்.எல்.ஏ., வெளியிட, முன்னாள் எம்.எல்.ஏ., கோமுகி மணியன் அதன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். மறைந்த பெருங்கவிக்கோ சேதுராமனுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. செயலாளர் மதிவாணன் நன்றி கூறினார்.