/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தமிழ் வழிக் கல்வி இயக்க கருத்தரங்கம்
/
தமிழ் வழிக் கல்வி இயக்க கருத்தரங்கம்
ADDED : டிச 11, 2024 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தமிழ் வழிக் கல்வி இயக்கம் சார்பில் கருத்தரங்கம் நடந்தது.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., விடுதி கூட்டரங்கில் நடந்த கருத்தரங்கிற்கு, வெற்றிவேல் தலைமை தாங்கினார். அம்பேத்கர், முத்துசாமி முன்னிலை வகித்தார். நாகராஜன் வரவேற்றார்.
கருத்தரங்கில், செல்வமணியன், சாந்தகுமார் ஆகியோர் அம்பேத்கரும் அரசியல் சட்டமும், மாந்தர் இன உரிமை நாளும் தமிழ் வழிக் கல்வியும், உயர் கல்வியில் தமிழ் ஆகிய தலைப்புகளில் பேசினர். இதில் கல்லை தமிழ்ச் சங்க செயலாளர் மதிவாணன், தலைவர் சுப்பராயன், தலைவர் பிரகாஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ராதா நன்றி கூறினார்.