/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 27, 2024 11:14 PM

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் மற்றும் பி.டி.ஓ., அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் ஆனந்தகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் சாமிதுரை ஆகியோர் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர்கள் ஆறுமுகம், செந்தில், முருகன், வீர புத்திரன், வேளாங்கண்ணி, இணைச் செயலாளர்கள் மணிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.