/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நுால் வெளியீட்டு விழா தமிழ் அறிஞர்கள் பங்கேற்பு
/
நுால் வெளியீட்டு விழா தமிழ் அறிஞர்கள் பங்கேற்பு
ADDED : மே 26, 2025 11:55 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் நுால் வெளியீட்டு விழா நடந்தது.
திருக்கோவிலுார் கலைக் கல்லுாரி வளாகத்தில் நிரஞ்சனா கிரியேஷன்ஸ் சார்பில் நடந்த கவிதை நுால்கள் வெளியீட்டு விழாவிற்கு, கல்லுாரி செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கோவல் தமிழ்ச் சங்கத் தலைவர் உதியன், தி.மு.க., நகர அவைத் தலைவர் குணா முன்னிலை வகித்தனர். பாரதிமணாளன் வரவேற்றார்.
கவிஞர் கலைசித்தன் எழுதிய 'எனக்கு நானே சரணாலயம்' கவிதை நுாலை முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம் வெளியிட, தியாகதுருகம் பாரதியார் தமிழ் சங்கத் தலைவர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார்.
'பாதரச பூக்கள்' கவிதை நுாலை அனைத்திந்திய தமிழ் சங்கத் தலைவர் ஆவடி குமார் வெளியிட, முன்னாள் எம்.எல்.ஏ., கோமுகி மணியன் பெற்றுக் கொண்டார். 'கனவு பெட்டகம்' நுாலை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குனர் சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ்., வெளியிட, கல்லை தமிழ்ச் சங்க செயலாளர் மதிவாணன் பெற்றுக் கொண்டார்.
கவிஞர்கள் சாந்தகுமார், வளர்மதி செல்வி, சுவாமிநாதன் ஆகியோர் நுால் குறித்து பேசினர். கல்லுாரி செயலாளர் ஏழுமலை, துணைச் செயலாளர் சத்ய நாராயணன், ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார், வழக்கறிஞர் அகல்யா நாதன், அருள்நாதன் தங்கராசு, உதவி பேராசிரியர் சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.