/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தமிழ்நாடு கிராம வங்கி கிளை இடமாற்றம்
/
தமிழ்நாடு கிராம வங்கி கிளை இடமாற்றம்
ADDED : மே 20, 2025 06:51 AM

கள்ளக்குறிச்சி : அதையூர் தமிழ்நாடு கிராம வங்கி கிளை இடமாற்றம் செய்யப்பட்டு திறப்பு விழா நடந்தது.
எலவனாசூர்கோட்டை அடுத்த அதையூர் மெயின் ரோட்டில் தமிழ்நாடு கிராம வங்கி செயல்பட்டு வந்தது. அதன் அருகிலேயே மக்களின் வசதிக்காக புதிய விசாலமான கட்டடத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு, திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, தமிழ்நாடு கிராம வங்கியின் வட்டார மேலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கிளை மேலாளர் சுபா விக்னேஸ்வரன் வரவேற்றார். அதையூர் ஊராட்சி தலைவர் செல்வம் புதிய கட்டடத்தில் வங்கி கிளையை திறந்து வைத்தார்.
விழாவில், காசாளர்கள் கோகுல் நாயர், சதீஷ்குமார், நகை மதிப்பீட்டாளர்கள் வெங்கடேசன், சிவானந்தம், அப்துல் பரூக், வங்கியின் வாடிக்கையாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
துணை மேலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
விழாவில், வங்கியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பிரதம மந்திரியின் காப்பீடு, விவசாய கடன்களின் விபரங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.