ADDED : ஏப் 28, 2025 10:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி::
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள், அரசு மற்றும் தனியார் பார்கள் அனைத்தும் வரும் 1ம் தேதி மூடப்பட வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் கடைகள், அரசு மற்றும் தனியார் பார்கள் அனைத்தும், வரும் 1ம் தேதி மே தினத்தன்று மூடப்பட வேண்டும். உத்தரவை மீறி மதுபாட்டில் விற்பனை செய்யும் பட்சத்தில், சம்மந்தப்பட்ட டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல் உத்தரவை மீறி செயல்படும் பார் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பார் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.