தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி


ADDED : அக் 11, 2024 11:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2024 11:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ரிஷிவந்தியம்,: ரிஷிவந்தியம் அடுத்த வெங்கலம் கிராமத்தில் ஆத்மா திட்டத்தின் சார்பில், விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சிக்கு வேளாண் உதவி இயக்குநர் சியாம்சுந்தர் தலைமை தாங்கினார். துணை இயக்குநர் பெரியசாமி முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் அய்யாதுரை உழவு முறைகள் குறித்தும், நெல், மக்காச்சோளம், உளுந்து, மணிலா, கரும்பு பயிர்களில் நோய் தாக்குதல் மற்றும் பூச்சி மேலாண்மை குறித்தும், தொழில் நுட்ப பயிற்சி குறித்தும் பேசினார்.

இயற்கை முறை விவசாயி ஒருங்கிணைப்பாளர் முருகன், மீன் அமிலம், பஞ்ச கவ்யா தயாரித்தல் பற்றியும், அவற்றின் பயன்கள் குறித்தும் பேசினார். வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து வேளாண்மை அலுவலர் புஷ்பவள்ளி பேசினார்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் வேலு, உதவி தொழில்நுட்ப மேலாளர் சுகனேஷ்வர், மேரி ஆனந்தி, பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்ட அலுவலர் மகாலட்சுமி ஆகியோர் செய்தனர்.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாட்டர்ஜி நன்றி கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us