/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கால பைரவர் சுவாமிக்கு தேய் பிறை அஷ்டமி பூஜை
/
கால பைரவர் சுவாமிக்கு தேய் பிறை அஷ்டமி பூஜை
ADDED : பிப் 04, 2024 03:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கால பைரவர் சுவாமிக்கு தேய் பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.
பைரவர் சுவாமிக்கு பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி நாளில், பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும் என்பது ஐதீகம். அதன்படி கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள கால பைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமி தினமான நேற்று முன்தினம் மாலை சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
தொடர்ந்து சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.