/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காமாட்சி அம்மன் கோவிலில் தை பொங்கல் சிறப்பு வழிபாடு
/
காமாட்சி அம்மன் கோவிலில் தை பொங்கல் சிறப்பு வழிபாடு
காமாட்சி அம்மன் கோவிலில் தை பொங்கல் சிறப்பு வழிபாடு
காமாட்சி அம்மன் கோவிலில் தை பொங்கல் சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 16, 2024 06:31 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கமலா நேரு தெரு, சித்தி விநாயகர், காமாட்சி அம்மன் கோவிலில் தை பொங்கல் சிறப்பு வழிபாடு நடந்தது.
நுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் தை பொங்கல் தினத்தை முன்னிட்டு சித்தி விநாயகர், காமாட்சி அம்மன், வீரபக்த ஆஞ்சநேயர், தட்சணாமூர்த்தி, கயல்விழி அம்பிகை உடனுறை ஏகாம்பரேஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத சிவசுப்ரமணியன், துர்க்கையம்மன், நவக்கிரக சுவாமிகளுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகாதீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, காமாட்சி அம்மனுக்கு பட்டுப்புடவை உடுத்தி, சர்வ அலங்காரம் செய்து லலிதா சகஸ்ரநாம மந்திரங்கள் வாசித்து குங்கும அர்ச்சனை நடந்தது. ராஜகோபால் சிவாச்சாரியார் பூஜைகளை செய்தார். பூஜை ஏற்பாடுகளை கோவில் தலைவர் வேலு செய்திருந்தார்.