/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தானுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து விவசாயிகளுக்கு வழங்கல்
/
தானுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து விவசாயிகளுக்கு வழங்கல்
தானுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து விவசாயிகளுக்கு வழங்கல்
தானுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து விவசாயிகளுக்கு வழங்கல்
ADDED : டிச 01, 2024 06:40 AM

கள்ளக்குறிச்சி: மேல்நாரியப்பனுாரில் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் விவசாயிகளுக்கு தானுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தலைவாசல் கால்நடை மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் இளங்கோ தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் கந்தசாமி முன்னிலை வகித்தார். காளசமுத்திரம் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் விமலாராணி வரவேற்றார். கால்நடை விரிவாக்க கல்வித்துறை பேராசிரியர் சக்திவேல், ஊட்டச்சத்தியியல் துறை இணை பேராசிரியர் முருகேஸ்வரி ஆகியோர், கிராண்ட் ஊட்டச்சத்தின் சிறப்புகள் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து விளக்கி பேசினர்.
நிகழ்ச்சியில், 140 விவசாயிகளுக்கு தானுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து வழங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த கால்நடை சிகிச்சை முகாமில், 252 மாடுகளுக்கு தடுப்பூசி, 60 கன்றுகளுக்கு பூச்சி மருந்து, 44 மாடுகளுக்கு சிகிச்சை மற்றும் 32 மாடுகளுக்கு சினை ஊசி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், தலைவாசல் கால்நடை மருத்துவக்கல்லுாரி இணை பேராசிரியர்கள் செந்தில்குமார், தேவகி, டாக்டர்கள் பேபிஉஷா, சுகம், ஜனார்த்தன், சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
உதவி பேராசிரியர் முரளி நன்றி கூறினார்.