/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பஸ்சில் எடுத்துச் சென்ற ரூ. 65 லட்சம் நகைகள் கொள்ளை; உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு
/
பஸ்சில் எடுத்துச் சென்ற ரூ. 65 லட்சம் நகைகள் கொள்ளை; உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு
பஸ்சில் எடுத்துச் சென்ற ரூ. 65 லட்சம் நகைகள் கொள்ளை; உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு
பஸ்சில் எடுத்துச் சென்ற ரூ. 65 லட்சம் நகைகள் கொள்ளை; உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு
ADDED : மார் 20, 2024 11:43 PM
உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டை அருகே, தனியார் பஸ்சில் எடுத்துச் சென்ற ரூ.65 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நம்புக்களஞ்சியம்,45. இவர் கோபிசெட்டிப்பாளையத்தில் நகைகள் செய்யும் பட்டறை மற்றும் நகை கடை வைத்துள்ளார்.
இவர் தயாரிக்கும் நகைகளை சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வது வழக்கம்.
தன்னிடம் வேலை செய்யும் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி, 51;என்பவரிடம்,ரூ.65 லட்சம் மதிப்புள்ள 1006 கிராம் நகைகளை வழங்கி, சென்னையில் உள்ள கடைகளில் கொடுத்து விட்டு வருமாறு அனுப்பினார்.
நகைகளுடன் பார்த்தசாரதி, நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் ஊட்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் சொகுசு பஸ்சில் ஏறி சென்றார். அதிகாலை 3:00 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை அடுத்த ஒலையனுார் அருகே டீக்கடையில் பஸ் நின்றது.
பார்த்தசாரதி கீழே இறங்கி சென்று டீ குடித்துவிட்டு பஸ்சில் தனது இருக்கைக்கு திரும்பினார். அப்போது அவர் அமர்ந்திருந்த சீட்டின் மேல் வைத்திருந்த நகைகள் இருந்த பையை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்த உளுந்துார்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பஸ்சில் பயணித்த 19 பயணிகளை தீவிர பரிசோதனை செய்து, விசாரித்தனர். அதன்பின், அவர்கள் பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பார்த்தசாரதி கொடுத்த புகாரின்பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

