/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிராமங்களில் கொடி கட்டி பறக்கம் பேனர் கலாசாரத்தால் மோதல்கள் ஏற்படும் அபாயம்
/
கிராமங்களில் கொடி கட்டி பறக்கம் பேனர் கலாசாரத்தால் மோதல்கள் ஏற்படும் அபாயம்
கிராமங்களில் கொடி கட்டி பறக்கம் பேனர் கலாசாரத்தால் மோதல்கள் ஏற்படும் அபாயம்
கிராமங்களில் கொடி கட்டி பறக்கம் பேனர் கலாசாரத்தால் மோதல்கள் ஏற்படும் அபாயம்
ADDED : ஆக 10, 2025 11:38 PM

திருக்கோவிலுார் : விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களில் மோதலை துாண்டும் வகையில் வைக்கப்படும் பேனர்களால் மோதல் அபாயம் உருவாகி உள்ளது.
ஆடி மாதம் என்றாலே தேர் திருவிழா, பொங்கல், காது குத்துதல் விழா என கிராமங்கள் பக்தி பரவசத்தில் மூழ்கிவிடும். குறிப்பாக அம்மனுக்கு நடத்தப்படும் விழாவில் பங்கேற்க வாழ்வாதாரம் தேடி வெளியூர் செல்லும் எளியவர்கள் முதல் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் வரை ஊர் திரும்பி விழாவை குதுாகலமாக கொண்டாடுவர்.
இது உறவுகளை ஒன்றிணைக்கவும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கடந்து அனைவரும் சமம் என்ற உணர்வை சமூகத்தில் விதைக்கவும் உருவாக்கப்பட்டது.
ஆனால் இன்று தங்கள் சமூகம், நண்பர்கள் வட்டாரம், அந்தஸ்தை உயர்த்தி யார் பெரியவர் என்பதை காட்டும் நிகழ்வாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதற்கு உதாரணம், நாயனுார் எல்லை பிடாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக, திருக்கோவிலுார் - வேட்டவலம் சாலை கிராமத்தின் மையப் பகுதியில் வரிசையாக பேனர்கள் கட்டியுள்ளனர்.
அதில், 'படையே வந்தாலும் படம் ஓடாது', 'எங்க ஊரு எங்க கெத்து', 'அன்ப அளக்கவும் தெரியும், வம்ப வாங்கவும் தெரியும்', 'பழகியவனுக்கும், பகைத்தவனுக்கு மட்டுமே தெரியும் எங்கள் வீரம்... இப்படி பல வாசகங்களில் விதவிதமான போட்டோக்களுடன் பேனர் வைத்துள்ளனர். இந்த கிராமத்தில் வைத்துள்ள பேனர்கள் ஒரு உதாரணம் மட்டுமே. இது போல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பல கிராமங்களில் வன்மத்தை துாண்டும் வகையில் ஏராளமான பேனர்கள் வைக்கப்படுகிறது.
இது மோதல்களுக்கும் அடித்தளமாக அமைகிறது. பேனர் வைக்க அரசு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய போலீசாரும் இதனை கண்டுகொள்ளாததால், கிராமங்களில் பேனர் கலாசாரம் கொடி கட்டி பறக்கிறது.
கோவில் விழா என்ற பெயரில் அனுமதியின்றி வைக்கும் இதுபோன்ற பேனர்களால் அமைதி பாதிக்கப்படும் என்பதை உணரும் வகையில் போலீசார் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.