/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பருவ மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம்... தயார்; பொதுமக்கள் தங்குவதற்கு 11 முகாம்கள் ஏற்பாடு்
/
பருவ மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம்... தயார்; பொதுமக்கள் தங்குவதற்கு 11 முகாம்கள் ஏற்பாடு்
பருவ மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம்... தயார்; பொதுமக்கள் தங்குவதற்கு 11 முகாம்கள் ஏற்பாடு்
பருவ மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம்... தயார்; பொதுமக்கள் தங்குவதற்கு 11 முகாம்கள் ஏற்பாடு்
ADDED : அக் 16, 2024 04:10 AM
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. மாவட்டத்தில் மழை பாதிப்புகள் உள்ளாகும் பகுதிகள் கண்டறிந்து, அனைத்து அரசு துறைகள் ஒருங்கிணைந்து 7 தாலுகாக்களில் 25 ஒருங்கிணைந்த மண்டலக் குழுக்கள் மற்றும் 412 கிராம அளவிலான குழுக்கள் அமைத்து அவ்வப்போது கள நிலவரங்கள் கண்டறியப்படுகிறது.
பேரிடர் பாதிப்புகளை கையாளுவதற்கு ஜெனரேட்டர்கள் 30, ஜே.சி.பி.,இயந்திரங்கள் 178, டிராக்டர்கள் 28, டிப்பர் லாரிகள் 84, மர அறுப்பான்கள் 453, நீர் இறைப்பான்கள், டார்ச் லைட்டுகள் 25, லைப் ஜாக்கெட் 68, உயிர் மிதவை 87, மணல் மூட்டைகள் 33,150, ஆம்புலன்ஸ் 31 ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முதல் உதவி புரிபவர்கள் 1,823, பாம்பு பிடிப்பவர்கள் 120 ஆகியோரும் தயார் நிலையில் உள்ளனர். மழை பாதிக்கும் இடங்கள், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் தங்குவதற்கு ஏதுவாக 11 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வெள்ள அபாயத்தை தவிர்க்கும் பொருட்டு வாய்க்கால், ஏரி, குளம் மற்றும் நீரோடைகளின் கரைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள அனைத்து வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் கிராமங்களில் தங்கி பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கி அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்ய மாற்று ஏற்பாடுக்கு செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று தடுக்க குடிநீரில் குளோரினேசன் செய்து விநியோகம் செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் இரண்டு ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் மற்றும் 7 தாலுகா அலுவலகங்களில் கட்டுபாட்டு அறைகள் துவங்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக கட்டுபாட்டு அறை இலவச எண் 1077, புகார் எண் 04151-222493, கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகம் 04151-222493, திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., அலுவலகம் 04153- 252312 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
தாலுகா அலுவலக கட்டுபாட்டு அறை எண் கள்ளக்குறிச்சி 04151-222449, சின்னசேலம் 04151-257400, சங்கராபுரம் 04151-235329, வாணாபுரம் 04151-235400, கல்வராயன்மலை 04151-242333, திருக்கோவிலுார் 04153-252316, உளுந்துார்பேட்டை 04149-222255 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தங்கள் வசிக்கும் பகுதியில் ஏற்படும் மழை பாதிப்புகள், இதர உதவிகள் தேவைபடின் கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொள்ளலாம். மழை, இடி, மின்னல் போன்ற இயற்கை இடர்பாடுகளை முன்னதாகவே தெரிவிக்கும் டிஎன் அலர்ட் ஆப் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் வட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி முன்னதாகவே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும். பழுதடைந்த பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கட்டிடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தியுள்ளார்.