/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டத்தில் சராசரியாக 30.48 மி.மீ., மழை பதிவு
/
மாவட்டத்தில் சராசரியாக 30.48 மி.மீ., மழை பதிவு
ADDED : மே 21, 2025 11:49 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சராசரியாக 30.48 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை 7:00 மணிக்குமேல் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் நகரப்பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் காலை 6:00 மணி முதல் நேற்று காலை 6:00 மணி வரை மழை அளவு மி.மீ., விபரம்:
கள்ளக்குறிச்சி 40, தியாகதுருகம் 30, விருகாவூர் 40, கச்சிராயபாளையம் 24, கோமுகி அணை 45, மூரார்பாளையம் 22, வடசிறுவள்ளூர் 28, கடுவனுார் 12, மூங்கில்துறைப்பட்டு 34, அரியலுார் 38, சூளாங்குறிச்சி 37, ரிஷிவந்தியம் 35, கீழ்பாடி 39, கலையநல்லுார் 44, மணலுார்பேட்டை 26, மணிமுக்தா அணை 27, வாணாபுரம் 35, மாடாம்பூண்டி 25, திருக்கோவிலுார் வடக்கு 14.50, திருப்பாலப்பந்தல் 28, வேங்கூர் 39, பிள்களையார்குப்பம் 14, எறையூர் 35, உ.கீரனுார் 20 என மாவட்டம் முழுதும் மொத்தம், 731.50 மி.மீ., மழை பெய்தது.
இதில் அதிகபட்சமாக கோமுகி அணை சுற்று வட்டார பகுதியில் 45 மி.மீ., மழை பெய்தது. சராசரியாக மாவட்டத்தில் 30.48 மி.மீ., மழை பதிவானது.