/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீட்டின் கதவை உடைத்து 9 சவரன் நகை திருட்டு
/
வீட்டின் கதவை உடைத்து 9 சவரன் நகை திருட்டு
ADDED : பிப் 15, 2024 10:16 PM
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே வீட்டின் கதவை உடைத்து 9 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த புத்திராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா மனைவி பாக்கியலட்சுமி, 26. கடந்த 10ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார்.
நேற்று முன்தினம் திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை திறந்து அதிலிருந்த 9 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
புகாரின் பேரில், வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப் பதிந்து, நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.