தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ 'லிப்ட்' பழுதாகி பாதியில் நின்றது

'லிப்ட்' பழுதாகி பாதியில் நின்றது

'லிப்ட்' பழுதாகி பாதியில் நின்றது


ADDED : ஆக 14, 2025 11:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2025 11:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி,; கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 'லிப்ட்' பழுதாகி பாதியில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பொதுமக்கள், ஊழியர்கள் மற்றும் டாக்டர்கள் பயன்பாட்டிற்காக 3 இடங்களில் 'லிப்ட்' வசதி அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 10:50 மணியளவில் 'அண்டர் கிரவுன்ட்' பகுதியில் இருந்த 'லிப்ட்'டில் 27 பேர் ஏறி முதல் தளத்திற்கு சென்றனர். அப்போது, 'லிப்ட்' திடீரென பழுதாகி பாதியில் நின்றது.

லிப்டில் சிக்கியவர்கள் அச்சமடைந்து கூச்சலிட்டனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது. தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதற்குள், எலக்ட்ரீசியன் உதவியுடன் லிப்டில் சிக்கிய அனைனவரும் 30 நிமிடங்களில் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

'ஓவர் லோடு' காரணமாக லிப்ட் பாதியில் நின்றிருக்கலாம் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

லிப்ட்டில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே செல்ல வேண்டும். இதில், ஆப்பரேட்டர் இல்லாததால் அதிகமானோர் செல்கின்றனர்.

இதனால் ஓவர் லோடு காரணமாக லிப்டில் அவ்வப்போது பழுது ஏற்படுகிறது. எனவே, மருத்துவமனைகளில் உள்ள அனைத்து லிப்ட்டுகளுக்கும் ஆப்பரேட்டர் நியமித்திட மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us