
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: பொருவளூர் ஆதி முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொருவளூர் நரிக்குறவர் காலனியில் உள்ள ஆதி முத்துமாரியம்மனுக்கு ஆண்டு தோறும் நடைபெறும் ஆடி மாத தீ மிதி திருவிழா கடந்த 18ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்து வந்தது.
21 ம் தேதி அம்மனுக்கு 108 பால்குட ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் மதியம் சாகை வார்த்தலும், மாலை தீமிதி திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் தீமிதித்து அம்மனை வழிப்பட்டனர். விழாவில் மூங்கில்துறைப்பட்டு சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனர். அதேபோல் மூங்கில்துறைப்பட்டு காமராஜர் நகரில் உள்ள மாரியம்மனுக்கு நேற்று மதியம் சாகை வார்த்தலும், இரவு சுவாமி வீதி உலா நடந்தது.