/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதியவரிடம் பணம் பறித்தவர் சிக்கினார்
/
முதியவரிடம் பணம் பறித்தவர் சிக்கினார்
ADDED : பிப் 20, 2024 11:58 PM
திருக்கோவிலுார், : திருக்கோவி லுார் பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருக்கோவிலுார் அடுத்த கீழத்தாழனுாரைச் சேர்ந்தவர் ஜெயராமன், 70; நேற்று காலை 10:00 மணிக்கு தனியார் பஸ்சில் திருக்கோவிலுார் பஸ் நிலையம் வந்து இறங்கினார். அப்பொழுது மர்மநபர் அவரது சட்டை பையில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு ஓட முயன்றார். முதியவர் சத்தம் போட்டதால் பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் துரத்திச் சென்று பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அரியலுார் மாவட்டம், செந்துறை, அண்ணா நகரைச் சேர்ந்த ரவி, 53; என தெரியவந்தது. இது குறித்து திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து ரவியை சிறையில் அடைத்தனர்.

