/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கரி துகளுக்கு ரூ.2 கோடியில் முற்றுப்புள்ளி; நிர்வாகத்தினர் தகவல்

ADDED : அக் 09, 2025 11:31 PM
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையிலிருந்து வெளியேறும் கரி துகள்களுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த ஆலை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
மூங்கில்துறைப்பட்டு, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையிலிருந்து வெளியேறும் கரி துகள்களால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து கடந்த 4ம் தேதி 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
இந்நிலையில் இது குறித்து ஆலை நிர்வாகம் சார்பில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
சர்க்கரை ஆலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இணை மின் நிலையம் தற்போது, பணிகள் விரைவாக நடைபெற்று வருவதால் வரும் டிசம்பர் மாதத்தில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
வரும் 2026 ஜனவரி மாதம் முதல் இணை மின் நிலையம் இயக்கத்திற்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
புகை ஓட்டத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பில் இ.எஸ்.பி., என்ற கருவி பொருத்தப்பட்ட உள்ளதால் கரி துகள்களை முழுமையாக நவீன முறையில் பில்டர் செய்து புகை போக்கியில் எந்த ஒரு கரித்துகள்களும் வெளியேறாதபடி இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.