/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
செக்யூரிட்டியை தாக்கியவர் கைது
/
செக்யூரிட்டியை தாக்கியவர் கைது
ADDED : மார் 07, 2024 11:44 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் செக்யூரிட்டியைத் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 50; இவர், கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு நுழைவு வாயிலில் செக்கியூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று காலை 9:00 மணிக்கு கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகர் கா.மாமனந்தல் ரோடு கொளஞ்சி, 58; மதுபோதையில் நுழைவு வாயில் முன்பு தனது பைக்கை நிறுத்தியுள்ளார்.
அப்போது பணியில் இருந்த குமார், வாகனத்தை நிறுத்தக் கூடாது என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கொளஞ்சி, பாதுகாப்பு அலுவலர் குமாரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
புகாரின் பேரில் கொளஞ்ச மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

