ADDED : ஏப் 28, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கர்ப்பமான சிறுமி மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கல்வராயன்மலை பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுமி, கடந்த 25ம் தேதி உடல்நல பிரச்னை காரணமாக கரியாலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். அப்போது பணியில் இருந்த டாக்டர் மயில்சாமி, சிறுமியை பரிசோதித்தார். அதில், சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்ததால், மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், திடீரென சிறுமி மாயமானார். இது குறித்து டாக்டர் மயில்சாமி அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, சிறுமியை தேடி வருகின்றனர்.

