/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி கமிட்டிக்கு தானியங்கள் வரத்து குறைந்தது
/
கள்ளக்குறிச்சி கமிட்டிக்கு தானியங்கள் வரத்து குறைந்தது
கள்ளக்குறிச்சி கமிட்டிக்கு தானியங்கள் வரத்து குறைந்தது
கள்ளக்குறிச்சி கமிட்டிக்கு தானியங்கள் வரத்து குறைந்தது
ADDED : ஆக 12, 2025 02:40 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அறுவடை பணிகள் குறைந்ததால், மார்க்கெட் கமிட்டிக்கு விளைபொருட்களை கொண்டு வருவது வெகுவாக குறைய துவங்கியுள்ளது. அதன்படி நேற்று கள்ளக்குறிச்சி கமிட்டியில் நேற்று 1.38 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வர்த்தகம் நடந்தது.
கள்ளக்குறிச்சியில் நடப்பு சாகுபடி பருவத்தில் அறுவடை பணிகள் குறைந்துள்ளதால், தற்போது மார்க்கெட் கமிட்டிக்கு, விளைபொருட்களின் வரத்து வெகுவாக குறைய துவங்கி உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக கள்ளக்குறிச்சி கமிட்டிக்கு குறைந்தளவு தானியங்களையே விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.
அதேபோல் சின்னசேலம் கமிட்டிக்கு விளைபொருட்களின் வரத்து நேற்று முற்றிலுமாக நின்று போனது. இதனால் மாவட்டத்தில் உள்ள மற்ற மார்க்கெட் கமிட்டிகளுக்கும் தானியங்கள் வரத்து படிப்படியாக குறைந்துள்ளது. மீண்டும் அறுவடை காலம் வரும் ஜனவரி முதல் துவங்கும் என கமிட்டி கண்காணிப்பாளர் சந்தியா தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று மக்காச்சோளம் 25 மூட்டை, கம்பு 5, உளுந்து 3, தலா 2 மூட்டை மணிலா, எள் என 37 மூட்டை விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,260 ரூபாய்க்கும், கம்பு 2,482, உளுந்து 3,404, மணிலா 7,407, எள் 6,448 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
கமிட்டியில் மொத்தமாக நேற்று ஒரு நாள், ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 769க்கு வர்த்தகம் நடந்தது. சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் நேற்று வரத்து ஏதும் இல்லாததால் வர்த்தகம் நடக்கவில்லை,
தியாகதுருகம் கமிட்டியில் நெல் 140 மூட்டை, கம்பு 8, தலா 2 மூட்டை உளுந்து, எள் என மொத்தம் 152 மூட்டை விளைபொருட்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். சராசரியாக நெல் 2,550 ரூபாய்க்கும், கம்பு 2,600, உளுந்து 6,000, எள் 7,000 ரூபாய் என 2,88,388 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

