
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாவட்ட முத்தமிழ்ச் சங்கம் சார்பில் உலக தன்னார்வலர்கள் தினம், விவசாயிகள் தினம் மற்றும் பாரதியார் பிறந்த தினம் ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
விழாவிற்கு முத்தமிழ்ச் சங்க சிறப்பு தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். காப்பாளர் கோமுகி மணியன், பொருளாளர் அம்பேத்கர், துணைத்தலைவர்கள் தாமோதரன், வளர்மதி ்செல்வி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் முருககுமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் கம்பன் கழக தலைவர் சுலைமான் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், மாவட்டத்தில் அதிகமுறை ரத்ததானம் செய்த தன்னார்வலர்களுக்கும், இயற்கை விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.
நிர்வாகிகள் லட்சுமிபதி, நெடுஞ்செழியன், விஜயகுமார், கதிர்வேல் உட்பட பலர் பங்கேற்றனர்,. சக்திவேல் நன்றி கூறினார்.

