ADDED : செப் 28, 2026 04:12 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வ.உ.சி., முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா மற்றும் விருது வழங்கும் விழா என நடந்த முப்பெரும் விழா நடந்தது.
கல்லை பாரதியார் தமிழ் சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு, சங்க நிறுவனர் துரைமுருகன் தலைமை தாங்கினார். தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்க செயலாளர் ராம்குமார், கல்லை பாரதியார் தமிழ்ச் சங்க பொருளாளர் ஆனந்தகுமார், செயலாளர் சந்திரா, தமிழக அரசின் வயது முதிர்ந்த மூத்த தமிழறிஞர் நலச்சங்க தலைவர் சுப்பையா முன்னிலை வகித்தனர்.
தலைவர் ராமானுஜம் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்கள் பேராசிரியர்கள் நாராயணசாமி, தமிழ்மாறன் ஆகியோர், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 80 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் மாமணி விருதும், 20க்கும் மேற்பட்டவர்களுக்கு விருதும் வழங்கினர்.
பேராசிரியர் சண்முகம் தலைமையில் 10க்கும் மேற்பட்ட கவிஞர்கள் கவிதை வாசித்தனர். தொடர்ந்து பாரதியும் தமிழும் தலைப்பில் வேங்கட ரமேஷ்பாபு, குப்பனார், செந்தில்நாதன், சுரேஷ் ஆகியோரின் கருத்தரங்கு நடந்தது. ஊட்டி கவிஞர் அமுதன் எழுதிய, இதய வானில் புதிய கீதம் எனும் புத்தகத்தை ஆசுகவி ஆராவமுதன் வெளியிட உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். பேராசிரியர் வேலாயுதம் புத்தக திறனாய்வு செய்தார். துணை செயலாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.
