/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 14,09,871! ஆண்களை விட பெண்களே அதிகம்
/
மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 14,09,871! ஆண்களை விட பெண்களே அதிகம்
மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 14,09,871! ஆண்களை விட பெண்களே அதிகம்
மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 14,09,871! ஆண்களை விட பெண்களே அதிகம்
ADDED : ஜன 07, 2025 12:09 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 14 லட்சத்து 9 ஆயிரத்து 871 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி (தனி), சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை மற்றும் திருக்கோவிலுார் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 1,561 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இந்த 5 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. அதில், மாவட்டம் முழுவதும் 6,92,008 ஆண்கள், 6,91,615 பெண்கள், 269 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 13 லட்சத்து 84 ஆயிரத்து 292 வாக்காளர்கள் இருந்தனர்.
தொடர்ந்து, கடந்த 1ம் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணி நடந்தது. அதில், 18 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், இறந்தவர்களின் பெயரை நீக்குதல், பெயர், முகவரியில் உள்ள திருத்தங்களை சரி செய்தல், முகவரி மாற்றுதல் தொடர்பாக மனு பெறப்பட்டது.
சுருக்க திருத்த பணிகள் முடிந்து, இறுதி வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று வெளியிடப்பட்டது.
அதில், கள்ளக்குறிச்சி (தனி), சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் பிரசாந்த், திருக்கோவிலுார் தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியலை சப் கலெக்டர் ஆனந்த்குமார் சிங் வெளியிட்டனர்.
அதன்படி, மாவட்டத்தில் 7,03,418 ஆண்கள், 7,06,176 பெண்கள், 277 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 14 லட்சத்து 9 ஆயிரத்து 871 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், ஆர்.டி.ஓ., லுார்துசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, அ.தி.மு.க., வழக்கறிஞரணி செயலாளர் சீனுவாசன், காங்., மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், பா.ஜ., மாவட்ட பொது செயலாளர் ராஜேஷ், தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் நல்லதம்பி உட்பட பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
திருக்கோவிலுார் தொகுதி வாக்காளர் பட்டியில் வெளியீடு நிகழ்ச்சியில் தாசில்தார் ராமகிருஷ்ணன், தேர்தல் துணை தாசில்தார் கீதா உள்ளிட்டோர் உடனிருந்தனர். .
தொகுதி வாரியாக வாக்காளர் எண்ணிக்கை விபரம்:
-------------------------------------------
தொகுதி ஓட்டுச்சாவடி ஆண் பெண் இதரர் மொத்தம்
----------------------------------------
ரிஷிவந்தியம் 306 1,40,121 1,39,034 60 2,79,215
உளுந்துார்பேட்டை 337 1,51,894 1,49,867 54 3,01,815
சங்கராபுரம் 300 1,37,106 1,39,637 51 2,76,794
கள்ளக்குறிச்சி(தனி) 332 1,42,754 1,46,192 80 2,89,026
திருக்கோவிலுார் 286 1,31,543 1,31,446 32 2,63,021
------------------------------------------
மொத்தம் 1,561 7,03,418 7,06,176 277 14,09,871
------------------------------------------
இந்த இறுதி வாக்காளர் பட்டியல் கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், நியமன ஓட்டுசாவடிகள் அமைவிடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் நீக்கம் செய்திட https://voters.eci.gov.in என்ற இணையவழி சேவையை பயன்படுத்தலாம் எனவும், voter help line mobile செயலி மூலம் தங்களது பெயரை பதிவு செய்யலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்தார்.